திருப்பூர் : தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 211 பயனாளிகளுக்கு, தங்கம் மற்றும் நிதியுதவியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 211 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி என ரூ.1 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் நம் மாநிலத்தில் திருமண நிதியுதவி, பொங்கல் பரிசு என வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.