கோவையில் காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவர் கொலை : இளைஞர் கைது

கோவை : உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் கல்லூரி மாணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் கல்லூரி மாணவரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம், உக்கடம் அருகே உள்ள கெம்பட்டிகாலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முரளிதரன் (21). இவர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி., (ஐ டி) படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாலாஜி என்பவரை போலீசார் விசாரணை செய்ததில், இறந்த கல்லூரி மாணவருக்கும் கைது செய்யப்பட்ட பாலாஜிக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. பாலாஜியும், பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் பாலாஜியுடன் பழகுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார்.

இதையடுத்து, முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பழகி வந்துள்ளார். இதில், கடந்த 23ம் தேதி மாணவியின் பிறந்தநாளையொட்டி, இந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீட்டருகே சென்று பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளனர். முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்ட பாலாஜியின் நண்பர்கள் தாக்குதல் நடத்த வந்தனர். ஆனால், முரளிதரனும் அவரது நண்பரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவத்தின் மூலம் முரளிதரனுக்கு பாலாஜிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பாலாஜியை, முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசம் அடைந்த பாலாஜி முரளிதரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...