திருப்பூர் : 16 -வது புத்தகத்திருவிழாவினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பாரதி புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 16 -வது புத்தகத்திருவிழா திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்றது . இந்த கண்காட்சியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 144 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகக்கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இதில், 1000 -க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பாக, இந்தாண்டு பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கள் பாடங்களை யூடியூப் மூலம் கற்றுக்கொள்ள தேவையான உபகரணங்கள் அடங்கிய ஸ்டால், வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல்நாளான நேற்று பறையிசையுடன் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு குணசேகரன், விஜயகுமார், நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் விழாவிற்கு வர தாமதமானதால், மேடை நிகழ்ச்சிகள் முடிந்த பின் 7 மணியளவில் தொடக்கி வைத்த புத்தகக்கண்காட்சியினை மீண்டும் ரிப்பன் கட்டி அமைச்சர் திறந்துவைத்தார். அப்போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உடனிருந்தார். முன்னதாக, கண்காட்சியினை 5.30 மணியளவில் ரிப்பன் வெட்டி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.