கடந்தாண்டு சூலூரில் இளம்பெண் மர்மமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : கொலையாளி கைது

கோவை : சூலூர் பகுதியில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி, திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கோவை : சூலூர் பகுதியில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி, திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டார். 



கோவை மாவட்டம், சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சரண்யா (30). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்ணம்பாளையம் அருகே உள்ள முள் வேலியில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்து கிடந்தார். பின்னர் தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், உயிரிழந்த சரண்யாவின் கணவர் மோகன், தனது மனைவி விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக மீீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.

இதையடுத்து, தனிப்பிரிவில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். இதில், சந்தேகத்துக்கிடமாக விருதுநகரைச் சேர்ந்த காளிராஜ் (34), என்பவரை கைது செய்தனர்.

மேலும், போலீசார் காளிராஜ் இடம் விசாரணை செய்ததில் மோகன் - சரண்யா தம்பதியர் சிவகாசியில் வசித்த போது, காளிராஜ் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், தம்பதியர் சூலூருக்கு வந்து விட்டனர். இதையறிந்த காளிராஜ் சூலூருக்கு வந்தும், சரண்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் காளிராஜ், சரண்யாவை வேனை மோதி கொலை செய்திருக்கிறார். 

இந்த கொலையை, விபத்து போல் சித்தரித்து இருக்கலாம் விசாரணையில் தெரிய வருகிறது. இதுதொடர்பாக, தொடர்ந்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...