கோவை: பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் காந்தியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் வகையில் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காகவும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரியால், சிறு குறு தொழில்கள் அதளபாதம் சென்று விட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு பெரியாரியல் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என கூறினார்.
தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், திராவிடர் தமிழர் கட்சி, உள்ளிட்ட 60 அமைப்புகள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.