அதிகரட்டியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை பத்திரமாக மீட்ட விவசாயிகள்

நீலகிரி : குன்னூர் அருகே, அதிகரட்டியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை விவசாயிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே, அதிகரட்டியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை விவசாயிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். 

குன்னுார் அதிகரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, அதிக பரப்பளவில், மலைக் காய்கறிகளான, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் கூடுமானவரை, கிணறுகளில் தண்ணீரை சேமித்து, பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். 



இப்பகுதியை சுற்றிலும், வனம் மற்றும் அதனையொட்டி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ள காரணத்தால்,காட்டெருமை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் வந்து செல்கின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமை, தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது, தண்ணீர் தேவைக்காக, காய்கறித் தோட்டங்களில் வந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், காட்டெருமை, மேய்ச்சலில் இருந்தபோது அங்கிருந்த எட்டடி உயரம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. 



இதையடுத்து, அதிகாலையில், தோட்டத்தைப் பார்க்கவந்த விவசாயி ஒருவர், காட்டெருமை கிணற்றில் விழுந்திருந்ததையும், சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் போராடியதையும் கண்டு, அந்த பகுதி மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,விவசாயிகள் இணைந்து சேற்றில் சிக்கிய காட்டெருமையை பத்திரமாக வெளியே கொண்டுவர, கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி வழியை ஏற்படுத்தியுள்ளனர். அதன்பின், காட்டெருமை பத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...