பள்ளி முதல்வர் மரணம் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

நீலகிரி : உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் நேதாஜி மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூங்கா சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி : உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் நேதாஜி மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூங்கா சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் காலை வாக்கிங் போகும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் உதகை காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்குத் தொடர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதனிடையே, அதே சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஆளுநரின் மண்வள கருத்தரங்கு நடைபெறும் நேரம் என்பதால் உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உத்தரவிற்கு இணங்கச் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அகற்றப்பட்டனர். இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்ததும், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், என்றார். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...