கோவையில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் : முறையான வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை : கோவையில் காணாமல் போன சிறுமிகளின் விவகாரத்தில் முறையான வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை : கோவையில் காணாமல் போன சிறுமிகளின் விவகாரத்தில் முறையான வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, ரவி ஆகிய தம்பதியின் மகள்கள் சுபாஷினி (15), மற்றும் கார்த்தி (13). இவர்கள் இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டனர். இதையடுத்து, அவர்களது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கடுத்ததாக, காணாமல் போன இருவரும் 7 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சில மர்ம நபர்களால் காரிலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். 



இதையடுத்து, இந்த மர்ம நபர்கள் யார் என்றும், அவர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம்? என்றும் பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக சூலூர் காவல்துறையிடம் தங்களது குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்யப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், சூலூர் காவல்துறை இந்தச் சம்பவத்தில் முன்னுக்குப்பின் முரணாகச் செயல்படுகின்றனர். இதுவரையிலும், குழந்தைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. 

இது குறித்து சிறுமிகளின் பெற்றோர், காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளிடம் பேசவிடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தகாத வார்த்தைகளில் அவர்களைத் திட்டுவதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். மேலும், தன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...