ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைதாகி, பிணையில் வெளிவந்த கோவை நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்த கோவை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்த கோவை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அரசு பள்ளிகளை மூடக் கூடாது, அரசாணை 56 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், கோவை மாவட்டத்தில் 50 -க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 



இதனைத் தொடர்ந்து, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முயற்சியால் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது. இதையடுத்து, கோவை சிறையில் இருந்து வெளிவந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு நூற்றுக்கணக்கான அரசு மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். அதற்கு முன்னதாக ஜமாப் மேளம் அடித்து, பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பளித்தனர். 

மேலும், அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவரான உமா செல்வராஜ், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் ஆறுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...