நீலகிரி : உதகையில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28 -வது தேசிய கருத்தரங்கை இன்று தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது :- மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் 1929 -ம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டு 103 மண்டல மையங்கள் மூலம் வேளாண் ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்கத் திட்டங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருவகிறது.
பருவநிலை மாற்றங்களால் மண்ணின் தரத்தை மதிப்பீடு செய்து அதிலுள்ள சத்து மற்றும் தாது குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்ற பரிந்துரைகளை இம்மையங்கள் அளித்து வருகின்றன. இந்தியாவில் மண் வள குறைபாடு 147 மில்லியன் எக்டேரிலும், 94 மில்லியன் எக்டேரில் நீராலும், 9 மில்லியன் எக்டேரில் காற்று மற்றும் 6 மில்லியன் எக்டேரில் தாது குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 18% உலக மக்களையும், 15% உலக கால்நடைகளையும் பாதுகாத்து வருகிறது. ஆனால், உலகளவில் 2.4% நிலப்பரப்பே இந்தியாவில் உள்ளது. உலகில் மக்கள் தொகை பெருக்கத்தால் தண்ணீர் தட்டுபாடு வேகமாக உயர்ந்து வருகிறது. சுமார் 1.2 பில்லியன், உலக மக்கள் அதாவது ஐந்தில் ஒரு பங்கு உலக மக்கள் தண்ணீர் தட்டுபாடு நிலவும் மண்டலத்தில் வாழ்கின்றனர்.
கடந்த 200 ஆண்டுகளில் வேளாண் துறையில் நாம் அடைந்துள்ள தொழில் நுட்ப சாகுபடி முறைகளால் நமது வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட வேளாண் துறையில் சாதனைகளை எட்டி விவசாயிகளுக்கு சென்று சேர்க்க வேண்டும்," என்றார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மண் மற்றும் நீர் வளம் தொடர்பான விழா மலரை வெளியிட்டார். மேலும், வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த 28 விஞ்ஞானிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் வழங்கினார். கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்ன சென்ட் திவ்யா, முன்னாள் இந்திய அணுசக்தி ஆணையம் தலைவர் எம்.ஆர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தூய்மை பாரத உறுதி மொழியை ஆளுநர் செய்து வைத்தார். மேலும், தூய்மை பாரத ரத வாகனத்தையும் ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.