கோவை : அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து வரும் ஆனா வராது எனத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
கோவை : அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து வரும் ஆனா வராது எனத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
காந்தி நினைவுநாளை முன்னிட்டு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- மதவெறிக்காக தேசதந்தை உயிர் பலி கொடுத்தும், இன்னும் பாஜக ஆளும் உத்திர பிரதேசத்தில், காந்தி மீது இந்து மகா சபைக்கு உள்ள கோபம் குறையவில்லை. காந்தியின் உருவ பொம்பையை சுட்டவருடன், பாஜக தலைவர் சிவாராஜ் சிங் சவுகான் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாவது, காந்தி கொடுத்த விலை போதாது என்பதற்கு சாட்சியாகவும், மதவெறி இந்த ஆட்சியில் தலை விரித்து ஆடுகிறது, விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை குறிப்பிடும் வகையில் உள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை பற்றி கவலை படாமல் ராமர் கோயில் கட்ட வேண்டும் என சாமியார்கள் நினைக்கிறார்கள். நாட்டில் மதவெறியை பரப்பி, இந்துக்கள் வாக்கு வங்கியை பெற்றிவிடலாம் என பாஜக கணக்கு போடுகிறது. சபரிமலை விவகாரத்திலும் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மோடி அரசு செயல்படுகிறது.
வடமாநிலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வரும் மோடி அரசு, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற
சமூக நீதியின் வேரை வெட்டும் வகையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அமல்படுத்த தயாராகி உள்ளது. இட ஒதுக்கீட்டு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை. பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து வெளியிட வேண்டும். ஏழைகளுக்கு உதவுகிறோம், வறுமையை போக்குகிறோம் என கூறும் மோடி தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தி இருந்தாலும், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி இருந்தாலும் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு என்ன வேலை இருக்கிறது. மேலும், வறுமை ஒழிப்பு திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தில் 19 மாநிலத்தில் பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது, இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து, அதிமுக பாஜக கூட்டணி குறித்து குறித்து எழுப்பிய கேள்விக்கு, "வடிவேலுபின் வரும் ஆனா வராது என்ற நகைச்சுவை தாம் ஞாபகம் வருகிறது, என கிண்டலாகத் தெரிவித்தார்.