கோவையில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் மனு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 



கோவை மாவட்டத்தில் உள்ள அரசூர், புகலூர், உடையார்பாளையம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் 400 கிலோவாட் அளவிற்கு மூன்று திட்டங்களாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 

இத்திட்டத்தால் விளைநிலங்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், அராஜகமான முறையில் விவசாயிகளின் நிலங்கள் இத்திட்டத்தில் கையகப்படுத்தப்படுவதாக கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. 



இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் கொங்கு எம் ராஜா மணி கூறியதாவது :- உலகளவில் அனைத்துத் துறைகளும் நவீனமயமாகி வரும் நிலையில், மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கும் மாற்று வழிகள் உள்ளது. அந்த மாற்று வழியைக் கேரளா, மதுரையில் இருந்து இலங்கைக்கு, சென்னை மாநகரைச் சுற்றி 400 கிலோவாட் திட்டத்தை 110 கிலோமீட்டர் தூரத்திற்கு என கேபிள் மூலம் அமைக்கும்போது, தமிழக அரசு கோவை மாவட்டத்தில் ஏன் கேபிள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 

பொள்ளாச்சி தாலுகாவின் பெரும்பகுதி கிராமத்தில், காவல்துறையை வைத்து விவசாயிகளை மிரட்டி அவர்களின் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அராஜகமாகச் செயல்படும் வட்டாட்சியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும், காவல்துறையை வைத்து விவசாயிகளை மிரட்டும் பட்சத்தில் உரிய போராட்டங்கள் நடத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...