கோவையில் தந்தி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரித்து போராட்டம் : 6 பேர் கைது

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்து கணிப்பை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்து கணிப்பை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தந்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் ஒட்டபிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் தோல்வியடைவார் எனவும், திமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற பொறுப்பாளர் நக்கீரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது உருவ பொம்மையை எரித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...