கோவை : மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் எச்சரித்துள்ளார்.
கோவை : மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் எச்சரித்துள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.சி.எஸ்.டி வகுப்பினருக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் போது, மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும், அவர் கூறியதாவது ;- ஏழை எளிய மக்கள் சென்னைக்கு வர முடியாததால் மாவட்ட தலைநகரங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
சிங்காநல்லூரில் சாக்கடை குழியை சுத்தம் செய்ய முயன்ற போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 120 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.எஸ்.சி ஆணையம் பல வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.