கோவை அரசு மருத்துவமனையில் செயல்படாமல் முடங்கி கிடக்கும் பேட்டரி கார்கள் : முதிர்ந்த நோயாளிகள் அவதி

கோவை : அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வரும் வயது முதிர்ந்த நோயாளிகள் பேட்டரி கார்கள் இல்லாததால் மருத்துவர்களை சந்திக்க செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவை : அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வரும் வயது முதிர்ந்த நோயாளிகள் பேட்டரி கார்கள் இல்லாததால் மருத்துவர்களை சந்திக்க செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 



கோவை - திருச்சி சாலையில் 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

ஒரு நாளைக்கு சுமாராக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும், 1700 முதல் 2000 ஆயிரம் பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், பெரிய பரப்பளவு கொண்ட கோவை அரசு மருத்துவமனையில், வெளி நோயாளியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வருபவர்களில் வயது முதிர்ந்த நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திக்க சிரமமடைந்து வந்தனர். 

ஆகையால், நடக்கவே முடியாமல் வரும் நோயாளிகளைக் கவனிக்கும் பொருட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவை அரசு மருத்துவமனைக்கு பேட்டரி சக்தியின் மூலம் இயங்கும் இரண்டு கார்கள் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது. இந்த பேட்டரி கார் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. 

தொடக்கத்தில், அங்குள்ள தனியார் பாதுகாவலர்களைக் கொண்டு பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன. இது அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு சற்றே ஆறுதல் அளித்தது. ஆனால், இயக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த சேவை முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இந்த பேட்டரி கார்கள் மருத்துவமனையின் முதல்வர் அலுவலகத்திற்குப் பின்புறமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, இரண்டு கார்களுமே பழுதான நிலையில், சமீபத்தில் ஒரு கார் மட்டும் சரி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அந்த வண்டியும் இயக்கப்படாமல் உள்ளது. பல லட்சம் செலவு செய்து மக்கள் சேவைக்காக வழங்கப்பட்ட வாகனங்கள், இப்படி வீணாகக் கிடப்பில் கிடப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...