கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட வருவாய் அலுவலர்

கோவை : கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

கோவை : கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டார். 



கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் இறுதி பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் (மாவட்ட ஆட்சியர் பொறுப்பு) வெளியிட்டார். இந்தப் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் 1,417,683 பேரும் பெண் வாக்காளர்கள் 14,43,967 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 311 பேரும் என 28,61,962 பேர் என வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் கூறும்போது, இறுதி வாக்காளர் பட்டியலானது வட்டாச்சியர் அலுவலகம், கோட்டாச்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும், என்றார். 

இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வில், திமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நாச்சிமுத்து, அதிமுக சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன், சி.பி.ஐ.சார்பில் தங்கவேல், சி.பி.எம்.சார்பில் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும், இந்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் கார்மேகம், தனலிங்கம் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...