கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழா நாளைத் தொடக்கம்

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு திருவிழா நாளைத் தொடங்குகிறது.

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு திருவிழா நாளைத் தொடங்குகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையின் சட்ட பூர்வமான பாதுகாப்பிற்காக, கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த தேசிய அளவிலான மாநாட்டை, மேற்கு தொடர்ச்சி மாலை பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைக்கின்றன. இதில் கலந்து கொள்ள மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு முக்கிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாடு நாளை தொடங்கி அடுத்தடுத்து மூன்று நாட்கள் நடைபெறும். இதில், 6 மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 1500 பேருக்கும் மேல் கலந்துகொள்கின்றனர். மேலும், சூழலியல் அறிஞர்கள், பழங்குடியின சமூக செயற்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த மாநாட்டில், மலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், விவாத மேடைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்கும் தனித்தனி அமர்வுகள், பழங்குடியினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இயற்கை விளை பொருள் அங்காடிகள், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் படங்கள் திரையிடல், புகைப்படம், ஓவியக் கண்காட்சிகளும் நடைபெற உள்ளன. 

இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் கூறும் போது, இந்தக் கருத்தரங்கு அமர்வுகள் தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. 

இதில், மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது குறித்தும், எல்லைகளில் வனவிலங்கு மற்றும் மனித மோதல்களைக் குறைப்பது குறித்தும், அவற்றின் இருப்பிடத்தினை குறித்தும் கலந்தாலோசிக்கப்படும். அதையடுத்து, அதற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்படும், என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், மேற்கு தொடர்ச்சி மலை குறித்த மாதேவ் காட்கில், கஸ்தூரிரங்கன் போன்றோரின் ஆவணங்கள் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து கருத்தரங்கின் ஒரு அமர்வில் மாதேவுடன் வீடியோ மூலமாக இணைவது குறித்தும் திட்டமிடுகிறார்கள். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவில் இருந்து சட்ட வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...