திருப்பூர் : கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு செந்தில் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன், சேகர் மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில், செந்தில் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சில நாட்களிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, முதலில் 3 பேர் மீதும் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர் அனுப்பர்பாளையம் போலீசார். இந்நிலையில், செந்திலின் உயிரிழப்புக்குப் பிறகு வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் 2 -வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, நீதிபதி ஜியாபுதீன் தனது தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதத்தைச் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.