கோவை விமான நிலையத்தில் ஸ்டாலினை நோக்கி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட வடமாநில இளைஞரால் சலசலப்பு

கோவை: கோவை விமான நிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அவரை நோக்கி "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை விமான நிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்த போது  வடமாநில இளைஞர் ஒருவர் அவரை நோக்கி  "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஈரோட்டில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் திமுகவினர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தலைவர் தளபதி வாழ்க என முழக்கமிட்டனர். 



அப்போது அங்கிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் "பாரத் மாதா கீ ஜே " என முழக்கமிட்டார். இதனால் விமான நிலையத்தில்  சலசலப்பு ஏற்பட்டது. அதே வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் சென்றார். இதனையடுத்து, போலீசார் அந்த வட மாநில இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது , பெங்களுரில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்து விட்டு, கோவையில் இருந்து டெல்லி செல்ல இருப்பதும் அவர் பெயர் சரீஷ் ஹரி ஒம் காசியாபாத்  என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மது போதையில் இருப்பதும் தெரியவந்த நிலையில் காவல் துறையினர் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...