தமிழகத்தில் வருகிற மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரம்பலூருக்கு வந்திருந்த தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும். அதாவது, நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் மறைமுக தேர்தல் நடைபெறலாம்.
வாக்காளர்கள் ஓட்டளித்து தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நேரடி தேர்தல் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிவடைந்துவிடும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் விபரம் தயார் செய்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுவரை தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் முடிவடைந்துள்ளது. மேலும், 10 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.