கோவை : மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவடைந்ததையடுத்து, லாரியில் ஏற்பட்ட யானைகளை கொடிஅசைத்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வழி அனுப்பி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 11-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 26 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்ற இந்த முகாம், ஒரு மண்டலம் என்ற கணக்கீட்டில் 48 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்தது.

இதற்காக நிறைவு விழா பூஜைகள் முடிந்து அணிவகுத்து நிறுத்தப்பட்ட யானைகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யானைகளுக்கு பழங்களை வழங்கி முகாமை முடித்து வைத்தார். பின்னர், லாரிகளில் யானைகள் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டு தயார்படுத்தி நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கொடி அசைத்து யானைகளை வழி அனுப்பிவைத்தார்.
முதலாவதாக, திருவண்ணாமலை ரேனுகாம்பாள் கோவில் யானை லட்சுமி புறப்பட்டு சென்றது. இதனையடுத்து, முகாமில் பங்கேற்ற யானைகளை சொந்த ஊர் செல்ல ஒன்றன் பின் ஒன்றாக லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. ஆனால், இதுவரை கூட்டமாக பிற யானைகளோடு பழகியபடி நட்போடு ஒன்றாக குளித்து, நடைபயிற்சி மேற்கொண்டு உண்டு களித்த யானைகள், முகாமில் இருந்து வெளியேற விருப்பமின்றி தவித்தன. சில யானைகள் பாகன்களின் உத்தரவுகளை ஏற்காமல் லாரிகளில் ஏற மறுத்து அடம் பிடித்தன. பின்னர், பாகன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாதானப்படுத்தி லாரிகளில் ஏற்றினர்.

இயற்கை சூழலில் கூட்டமாய் வாழும் இயல்புடைய யானைகள், அவை வளர்க்கப்படும் கோவில்களில் இதுவரை தனித்திருந்த நிலையில், முகாமில் தன் இனத்தை சேர்ந்த பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் வனம் சார்ந்த பகுதியில் தங்கியுள்ள காரணத்தால், அவையனைத்தும் முகாமின் 48 நாட்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டன. இதனால், இம்முகாமில் யானைகளின் உடல் நலம் மட்டுமின்றி, அவற்றின் மனநலமும் மேம்பட்டுள்ளன. தற்போது முகாம் முடிந்து விட்டதால் நாங்கள் மட்டுமல்ல யானைகளும் சோகத்துடனே கிளம்புவதாக பாகன்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில்களுக்கு செல்லும் இந்த யானைகள் நாளை முதல் வழக்கமான தங்களது திருப்பணிகளை மேற்கொள்ள உள்ளன.