தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. இ.பி.எப். பணிபலன்களை அரசுத் துறைகளே வழங்கக் கோரிக்கை

கோவை : தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ஆகிய பணி பலன்களை ஒப்பந்தம் வழங்கும் அரசுத் துறைகளே வழங்க வேண்டும் என கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ஆகிய பணி பலன்களை ஒப்பந்தம் வழங்கும் அரசுத் துறைகளே வழங்க வேண்டும் என கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ஆகிய தொகைகளை அரசுத் துறைகளே வழங்க வேண்டும் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபத்தை உறுதி செய்ய வேண்டும் உள்பட மொத்தம் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதின்றத்தின் உத்தரவின்பேரில், தமிழக அரசின் முதன்மை செயலர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது. அப்போது, கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க செயலர் கே.சி.சந்திர பிரகாஷ் கூறியதாவது :- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்., ஆகிய பணி பலன்களை ஒப்பந்தம் தரும் அரசு துறைகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பெரும்பாலும், ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் தினக்கூலிகளாக இருப்பதால், ஒப்பந்தம் பெறும்போது மட்டுமே அவர்களுக்குப் பணி வழங்க இயலும். 

கையிருப்பில் ஒப்பந்தங்கள் இல்லாத சமயத்திலும் தொழிலாளர்களுக்கு பணிபலன்களை ஒப்பந்ததாரர்களால் செலுத்த முடியவில்லை. எனவே, இந்தப் பணிபலன்களை தொழிலாளர்களுக்கு அரசுத் துறைகள் நேரடியாகவே வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தார் கலவை தயாரிக்கப்படும்போது, தற்போது பயன்படுத்தப்படும் பர்னீஷ் ஆயிலால் அதிக மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால், டீசலை பயன்படுத்த தார் கலவை தயாரிக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பேச்சுவார்த்தையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்வதாக ஒப்புக் கொண்டது. 

அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அரசு ஒப்பந்தங்களைப் பெறும்போது, 10 சதவீத லாபத்தை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையையும் ஆவணம் செய்வதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசுத் துறைகள் கமிட்டி அமைத்து இருப்பதாகவும், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்ற பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஒப்பந்தத் தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என சங்கம் சார்பில் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஒப்பந்த நிர்ணயத் தொகை தொடர்பான அனைத்துக் குறைகளையும் கமிட்டிகள் அமைத்து தீர்த்து வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார். 

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சங்கத் தலைவர் உதயகுமார், சங்க நிர்வாகிகள் மைக்கேல் செல்வராஜ், அம்மன் ஸ்டீபன் ஆகியோர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...