நீலகிரி : உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனித நேய வார விழாவின் நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மனித நேய வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கடந்த 24-ம் தேதி உதகையில் உள்ள பிரிக்ஸ் பள்ளி உள்அரங்கில் மனிதநேய வாரவிழா மற்றும் மனிதநேயம் தொடர்பாக கண்காட்சியுடன் தொடங்கப்பட்டது.
மனிதநேய வார விழாவையொட்டி வனத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சிகளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாடகம், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கவிதை, ஓவியம் போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன.

இந்த நிலையில், மனிதநேய வார விழாவின் நிறைவு விழா உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.