அலகுமலை தீண்டாமை வேலி விவகாரத்தில் ஊர்மக்களின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை

திருப்பூர் : அலகுமலை தீண்டாமை வேலி விவகாரத்தில், அதனை எதிர்ப்பவர்கள் கோவிலுக்கு செல்பவர்களே அல்ல என்றும், கோவில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஊர்மக்களின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் : அலகுமலை தீண்டாமை வேலி விவகாரத்தில், அதனை எதிர்ப்பவர்கள் கோவிலுக்கு செல்பவர்களே அல்ல என்றும், கோவில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஊர்மக்களின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார். 



திருப்பூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் குறைதீர்ப்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் நேரடியாக எங்களை அலுவலகத்தில் சந்தித்து மனு அளிப்பதில் சிரமம் இருக்கும் என்பதால், மாவட்ட அளவில் சந்தித்து மனுக்களைப் பெறுகிறோம். தாலுகா அளவிலும் மக்களை சந்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் 132 பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. கிராம மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், அவற்றில் நலத்திட்டங்கள் செய்ய வேண்டிய கிராமங்களை கண்டறிய உத்தரவிட்டுள்ளோம். 



மேலும், அலகுமலை தீண்டாமை வேலி விவகாரத்தில், அதனை எதிர்ப்பவர்கள் கோவிலுக்கு செல்பவர்களே அல்ல.  அங்கு நான் நேரடியாக ஆய்வு செய்ய சென்றபோது நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும், கோவில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஊர்மக்களின் கோரிக்கையை ஏற்று வேலி அமைக்கப்பட்டுள்ளது. அது தீண்டாமை வேலி அல்ல, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

2 மணி நேரம் காத்திருப்பு : 

முன்னதாக, குறைதீர்ப்புக் கூட்டம் காலை 10:30 மணியளவில் துவங்கும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், சுமார் 12.30 மணியளவில் வந்தார். இதனால், குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு வந்திருந்த பல்வேறு துறை அரசு அதிகாரிகள், மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் நலத்திட்டம் பெற வந்த பயனாளிகளும் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...