9 நாட்கள் நீடித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 

பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 200-க்கும் மேற்பட்ட அமைப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் என நடத்தினர். இதில், 50-க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 



இருப்பினும், தமிழக அரசின் கடுமையான எச்சரிக்கையால் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். 96 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசின் தொடர் அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை நடத்தி வந்தது. 

இந்த நிலையில், அந்த அமைப்புக்குப் பலவகையிலும் நெருக்கடி மற்றும் ஆதரவு குறைந்த நிலையில், போராட்டத்தைக் கைவிடுவதா..? தொடர்வதா..? என்ற சூழலில் திருவல்லிக்கேணியில் இன்று உயர்மட்ட குழுக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களின் மீதான நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...