நீலகிரி : முதுமலையில் உள்ள மசினியானை தற்போது உடல் நலம் தேறிவருவதால், பாகன்களின் உதவியோடு மசினியை குளிப்பாட்டி புத்துணர்வூட்டும் பணியில் முதுமலை வன அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் கோவிலுக்கு சென்ற முதுமலை வளர்ப்பு யானை 'மசினி' மீண்டும் முதுமலை திரும்பியது. முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி மசினியம்மன் கோவில் அருகே கடந்த, 2006 -ல் தாயை விட்டு பிரிந்த எட்டு மாத குட்டியானை மயக்க நிலையில் கிடந்தது. அப்போதைய முதுமலை வார்டன் ராஜேஸ் குமார் டோக்ரா, கால்நடை டாக்டர் கலைவாணன் மற்றும் வன ஊழியர்கள் அதனைக் காப்பாற்றினர். மசினியம்மன் கோவில் அருகே மீட்கப்பட்டதால், யானை குட்டிக்கு மசினி எனப் பெயரிட்டனர்.

இதையடுத்து, வனச்சூழலில் வளர்ந்த யானை குட்டிக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி தினத்தில், யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தது. இந்நிலையில், கடந்த 2015 -ல், மசினி யானை சமயபுரம் கோவிலுக்கு அனுப்பப்பட்டது. கோவில் நிர்வாக பராமரிப்பில் உள்ள யானை, ஏற்கனவே, இரண்டு பாகனங்களை தாக்கியுள்ளது. இதனால், மே, 25 -ல் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, எட்டு பேர் காயமடைந்தனர். இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க, யானையை முதுமலைக்கு அனுப்ப வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட், கோவில் யானை மசினியை, தேவையான சிகிச்சை அளிக்கவும், மீண்டும் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லுாரியில், சிகிச்சை பெற்று வந்த மசினி யானை, கோர்ட் உத்தரவு படி, கால்நடை, மருத்துவ குழுவினருடன் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், யானையின் உடல் எடை குறைந்துள்ளதை தொடர்ந்து இதற்கு சிகிச்சை அளிக்க இரண்டு கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் மசினியை குளிக்க வைத்து புத்துணர்வூட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.