கோவை : கோவை வழியாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2018 -ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், கொழும்பு போன்ற அயல்நாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2018 -ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2017 -ம் ஆண்டை விட 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கேற்றபடி, கோவை விமான நிலையத்தின் அமைப்பும் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கணிசமான பயணிகளின் அதிகரிப்புக்குக் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமான சேவை அதிகரித்துள்ளதும் காரணமாகும். இதைப் போலவே, விமானங்களின் வழியே இடமாற்றப்படும் சரக்குகளின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. கிடைத்த தகவலின் பேரில், 2017 -ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 22,87,962, கடந்த 2018 -ம் ஆண்டில் 29,12,338 -ஆக உயர்ந்துள்ளது. இதனால், சுமாராக 27.29 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 21,11,941, 2018 -ம் ஆண்டில் விமான சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 26,69,203. இதன் அடிப்படையில் 26.39 சதவீதம் கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது.
இதைப் போலவே, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2017 -ம் ஆண்டில் 1 லட்சத்து எழுபத்தி ஆயிரத்து இருபத்தி ஒன்று மற்றும் 2018 -ம் ஆண்டில் 2 லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நூற்று முப்பத்து ஐந்தாகும். 2017 -யை விடவும் 2018 -ம் ஆண்டில் 38.13 சதவீதம் பயணிகளின் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்த விமான போக்குவரத்து அதிகரிப்பிற்கு விமான நிலையங்களில் இரவில் தங்கும் உள்நாட்டு விமானங்களுக்கு, எரிபொருளுக்கான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது முக்கிய காரணமாகும். இதனால் கோவை விமானநிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை நிறுத்தி விட்டு அதிகாலையில் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
டி.ஜி.சி.ஏ (DGCA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களில் கோவை விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஒன்றைத் தொட்டுள்ளது. மேலும், வரும்காலத்தில் இதைவிடவும் விமான சேவையை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு சேவையை பொறுத்தமட்டில், கோவையிலிருந்து சென்னை செல்லும் விமான பயணிகளே 85,041 என்ற எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நியூ டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கோவை : கோவை வழியாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2018 -ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், கொழும்பு போன்ற அயல்நாடுகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2018 -ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2017 -ம் ஆண்டை விட 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கேற்றபடி, கோவை விமான நிலையத்தின் அமைப்பும் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கணிசமான பயணிகளின் அதிகரிப்புக்குக் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமான சேவை அதிகரித்துள்ளதும் காரணமாகும். இதைப் போலவே, விமானங்களின் வழியே இடமாற்றப்படும் சரக்குகளின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.
கிடைத்த தகவலின் பேரில், 2017 -ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 22,87,962, கடந்த 2018 -ம் ஆண்டில் 29,12,338 -ஆக உயர்ந்துள்ளது. இதனால், சுமாராக 27.29 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 21,11,941, 2018 -ம் ஆண்டில் விமான சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 26,69,203. இதன் அடிப்படையில் 26.39 சதவீதம் கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது.
இதைப் போலவே, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2017 -ம் ஆண்டில் 1 லட்சத்து எழுபத்தி ஆயிரத்து இருபத்தி ஒன்று மற்றும் 2018 -ம் ஆண்டில் 2 லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நூற்று முப்பத்து ஐந்தாகும். 2017 -யை விடவும் 2018 -ம் ஆண்டில் 38.13 சதவீதம் பயணிகளின் விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்த விமான போக்குவரத்து அதிகரிப்பிற்கு விமான நிலையங்களில் இரவில் தங்கும் உள்நாட்டு விமானங்களுக்கு, எரிபொருளுக்கான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது முக்கிய காரணமாகும். இதனால் கோவை விமானநிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை நிறுத்தி விட்டு அதிகாலையில் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
டி.ஜி.சி.ஏ (DGCA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களில் கோவை விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஒன்றைத் தொட்டுள்ளது. மேலும், வரும்காலத்தில் இதைவிடவும் விமான சேவையை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு சேவையை பொறுத்தமட்டில், கோவையிலிருந்து சென்னை செல்லும் விமான பயணிகளே 85,041 என்ற எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நியூ டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.