கோவை : தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாம் இன்று மாலை நிறைவடைவதால், சொந்த ஊர்களுக்குக் கோவில் யானைகள் லாரிகள் மூலம் பயணிக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 14 -ம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 26 யானைகளும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றுள்ள இந்த முகாம் ஒரு மண்டலம் என்ற கணக்கீட்டில் 48 நாட்கள் நடைபெற்று முடிந்து இன்றுடன் நிறைவடையவுள்ளது. சொந்த ஊர்களுக்குத் திரும்பி செல்ல இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பின்னர் லாரிகள் மூலம் பயணிக்கும் வகையில் யானைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

இம்முகாமில் கோவிகளில் வளர்க்கப்படும் யானைகளுக்கு யானைகளுக்கு அரிசி, கொள்ளு, கேழ்வரகு, பாசிப்பயிறு, அவல் மற்றும் அவற்றுக்கு விருப்பமான கூந்தப்பனை, புல் வகைகள், கரும்பு சோகை, சோளத்தட்டு, கீரை வகைகள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள், தேங்காய், வெல்லம், கருப்பட்டி, ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, பேரீச்சை போன்ற பழவகைகளும், உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு ஊட்டச் சத்து மருந்துகளும் தினசரி இரு முறை வழங்கப்பட்டன.
தினசரி இரு வேளை பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சியும் வழங்கப்பட்டன. மேலும் கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளின் பார்வை குறைபாடு, பாத வெடிப்பு, குடல் புழுக்கள், உடலில் உள்ள கொப்பளங்கள் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுத் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. யானைகள் குளிப்பதற்கு பிரத்தேயகமான ஷவர் பாத் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி இரு முறை யானைகள் குளிக்க வைக்கப்பட்டன.
இயற்கை சூழலில் கூட்டமாய் வாழும் இயல்புடைய யானைகள், அவை வளர்க்கப்படும் கோவில்களில் இதுவரை தனித்திருந்த நிலையில், முகாமில் தன் இனத்தைச் சேர்ந்த பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் வனம் சார்ந்த பகுதியில் தங்கியுள்ள காரணத்தால் அவையனைத்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டன என்றும் இதனால் இம்முகாமில் யானைகளின் உடல் நலம் மட்டுமின்றி அவற்றின் மன நலமும் மேம்பட்டுள்ளதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் பாகன்கள் தற்போது முகாம் முடிந்து விட்டதால் நாங்கள் மட்டுமல்ல யானைகளும் சோகத்துடனே கிளம்ப தயாராகி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், நேற்றிரவு முதலே யானைகளுக்கு பெரும்பாலும் சத்தான பழங்கள் மற்றும் பசுன்தீவனங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவற்றின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சரிவிகித உணவுகளை வழங்கி பயணத்திற்கு ஏற்ற வகையில் யானைகளின் உடல் நிலையைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, இன்று மாலை நிறைவு விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பழங்களைக் கொடுத்து யானைகளை அந்தந்த சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளனர். யானைகளை அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களில் இருந்து லாரிகள் அனுப்பி வைக்கபட்டுள்ளன. மாலையில் லாரிகளில் ஏற்றப்பட்டு பின்னர் நாளை மறுநாளுக்குள் யானைகள் சொந்த இடங்களுக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.