கோவையில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது : கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை : கோவையில் சட்ட விரோதமாகப் போதை பொருட்களை விற்பனை செய்யும் 3 இளைஞர்களைக் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சா, ரூ.15 ஆயிரம் மற்றும் ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவையில் சட்ட விரோதமாகப் போதை பொருட்களை விற்பனை செய்யும் 3 இளைஞர்களைக் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சா, ரூ.15 ஆயிரம் மற்றும் ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கோவையில் சரவணம்பட்டி பகுதியில் கோவை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். 

இதில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் அதேபோல வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் குறிவைத்து கஞ்சா, அபின், போதை மாத்திரைகள் & ஊசிகள் போன்ற பல்வேறு சட்ட விரோத வியாபாரங்கள் செய்யும் கும்பல்கள் இந்தப் பகுதியில் தலைவிரித்தாடி வருகின்றனர். 

இது மாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ், துணை ஆணையாளர் சட்டம்-ஒழுங்கு டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சரவணம்பட்டி போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பாரதிராஜா தலைமையிலான சரவணம்பட்டி போலீஸார், சின்னவேடம்பட்டி ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த சோதனையில், ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்களை போலீஸார் பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் கணபதியை சேர்ந்த மோகித்குமார் (22), உக்கடத்தை சேர்ந்த நதீஷ் குமார் (26), மணியகாரன்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(22), ஆகியோர் எனத் தெரியவந்தது. 

இதில், நதீஷ்குமார் கூலி வேலை செய்பவர் என்பதும் மோகித்குமார், நவீன்குமார் ஆகியோர் பட்டதாரிகள் எனவும், கல்லூரி முடித்த பின்னர் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

மேலும், அவர்களின் தொழிலில் வருவாய் குறைவாக வந்ததால், கடந்த இரண்டு மாதங்களாகக் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தெரிந்த நபர்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் இடத்தில் கஞ்சாவை கிலோ கணக்கில் வாங்கி கோவைக்கு கொண்டு வந்து பொட்டலம் போட்டு, கல்லூரி மாணவர்கள்,ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கூலி வேலைக்கு செல்வோர்கள் ஆகியோரைக் குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். 

இதையடுத்து, சரவணம்பட்டி போலீஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சா, ரூ.15 ஆயிரம் தொகையும், ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதேபோல, வடவள்ளி போலீஸார் வீரகேரளம் - நாகராஜபுரம் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள இடத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் சுற்றிய இரண்டு பேரை போலீஸார் பிடித்து விசாரித்த போது கஞ்சா விற்பது தெரியவந்தது. 

விசாரணையில் பிடிபட்டவர்கள் மசக்காளிபாளையத்தை சேர்ந்த விமல்(34), கரடிமடையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(21), ஆகியோர் எனத்தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் இரண்டு பேரையும் கைது செய்து, இவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...