உதகையில் பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி : இஸ்ப்ரவா ரியல் எஸ்டேட் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி இரண்டாவது முறையாக நடைபெற்றது.

நீலகிரி : இஸ்ப்ரவா ரியல் எஸ்டேட் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி இரண்டாவது முறையாக நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் குன்னுாரில் கடந்த அக்டோபர் மாதம் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள பழங்குடியின குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 200 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் பங்கேற்று, பயன் பெற்றனர். மீண்டும் நேற்று பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.



பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரமான குடிநீருக்கு தட்டுப்பாடும், சுகாதார வசதிகள் குறைபாடும், அன்றாட உணவுத் தட்டுப்பாடும் நிலவுவதால் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சவாலாக இருக்கிறது. இதை தடுக்க இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு புரதச் சந்து நிறைந்த நெய், சிக்கி, பேரீச்சம்பழம் போன்றவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா இன்னசன்ட் சிறப்பித்தார். 

இந்நிகழ்ச்சியில் இஸ்ப்ரவா சிஇஓ நிப்ராந்த் ஷா பேசுகையில், "இஸ்ப்ரவாவுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் பெறும் செல்வத்தில் நன்கொடை அளிப்பது என்ற வலுவான கோட்பாட்டினை கொண்டுள்ளோம். எங்கே வீடுகளைக் கட்டமைக்கிறோமோ, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகளை நன்றாகவே உணர்கிறோம். அப்பகுதியில் நிலம் வாங்கும் அளவுக்கு அவர்களுக்குத் திரும்பவும் பயன் தர முயற்சி செய்கிறோம். 

வீடுகளைக் கட்டமைப்பதிலும் நீடித்தத் தன்மையுடைய சில நல்லெண்ண நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். கட்டுமானப் பகுதிகளில் மரங்கள் நடுகிறோம். வசதி வாய்ப்பற்ற கூலி வேலையாட்கள் நலனில் அக்கறை செலுத்துகிறோம். குன்னூரில் நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த முதல் திட்டத்தின் வாயிலாக உள்ளூர்வாசிகளுடன் இணைந்து களப் பணிகள் ஆற்றக் காத்திருக்கிறோம்.

நீலகிரியில் இஸ்ப்ரவாவின் முதல் முயற்சி இஸ்ப்ரவா செப்ஸ்டோவ் ஹாஸ், 1400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வில்லா. இது குன்னூரில் அமைக்கப்பட்டுள்ளது," எனப் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...