கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை தொடக்கம் : கொள்முதல் விலையை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் : காங்கயம் வட்டத்தில் பவானிசாகர் அணை பாசனத்தின் மூலம் பயன்பெறும் கீழ்பவானி பாசனத்தில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : காங்கயம் வட்டத்தில் பவானிசாகர் அணை பாசனத்தின் மூலம் பயன்பெறும் கீழ்பவானி பாசனத்தில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 



பாவனிசாகர் அணையினால் கீழ்பவானி வாய்க்கால் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் திட்டுப்பாறை, மருதுறை, நத்தக்காடையூர், முத்தூர் மற்றும் மங்களப்பட்டி பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைப் பயன்படுத்தி நத்தக்காடையூர் மற்றும் முத்தூர் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். 

கடந்த டிசம்பர் மாதம் வரை பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. மூன்று வருடம் கழித்து நீர் திறந்து விடப்பட்டதால் இந்த போகத்திற்கான நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மூன்று ஆண்டுகள் கழித்து நடவு செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு நெற்கதிர்களில் அதிக நெல்மணிகள் பிடித்துள்ளதால் மகசூலும் கூடியுள்ளது. 

இந்நிலையில், நடவு ஆட்கள் கூலி உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர். இதனிடையே, அரசு கொள்முதல் நிலையங்களின் மூலமாகக் கொள்முதல் செய்யும் நெல்லுக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ.18 அறிவித்துள்ளது. உற்பத்தி செலவை கணக்கில் கொள்ளும் போது இது குறைந்த விலையாக இருப்பதால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு அதிகரித்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், அறுவடை இயந்திரங்களைக் கொண்டு நெல் அறுவடை செய்யும் போது வயலில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க கரூர், சேலம், தருமபுரி பகுதிகளில் இருந்து ஆட்களை வரவழைத்து விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளை துவக்கி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...