நீலகிரியில் 48 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளிக்கான விருது வழங்கிக் கவுரவித்தார் மாவட்ட ஆட்சித்தலைவர்

நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்குத் தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்குத் தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்கு 2017-2018 -ம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிப் பேசியதாவது ;- பள்ளி வளாகத்தில் சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை, நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேலாண்மை, தண்ணீர் வசதி, கழிவறை, சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய செயல்பாடுகளை  சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி 8 பள்ளிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் 40 பள்ளிகளுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் ஆக மொத்தம் 48  சிறந்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான இந்த தூய்மை பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 32 அரசு பள்ளிகள் ஆகும். 



அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பால்வளத்துறையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நலனைக் கருத்தில் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதி என்கிற திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த சந்தாத் தொகையாக ரூ.1 வீதம் அவர்களுக்கான பால்பணத் தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. 

இத்தொகையுடன் சங்கத்தின் சார்பாக 0.50 பைசாவும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 0.50 பைசாவும் ஆக மொத்தம் ஒட்டு மொத்தமாக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ரூ.2 வீதம் இந்நிதிக்குச் சந்தாவாக செலுத்தப்படுகிறது. எதிர்பாராத விபத்தினால் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பினர்களுக்கும், அவர்களைச் சார்ந்த குடும்ப அங்கத்தினர்களுக்கும் மீளாத்துயரத்தில் ஆதரவளித்திடும் வகையில் இழப்பீட்டுத் தொகையாக இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 முதல் ரூ.1,75,000 வரையில் பாதிப்பு நிலையின் தன்மையைப் பொறுத்து இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

அதோடு மட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் 12 -ம் வகுப்பு வரை பயிலும் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ஒரு குழந்தைக்கு தலா ரூ.10,000 வீதமும், 18 வயது நிரம்பிய மகளாக இருப்பின் திருமண உதவித்தொகையாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று 2017-2018 ஆம் நிதியாண்டில் 4 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1,75,000 வீதம் ரூ.7,00,000 இலட்சமும், ஒரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகை ரூ.20,000 காசோலை வழங்கியுள்ளோம், இவ்வாறு அவர் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சாந்தி ராமு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவர் .அ.மில்லர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...