கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு மையத்திற்கு ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அவினாசி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவத்துறையில் தங்கள் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாக மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை மற்றும் மதுரையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 

அதன்படி, தற்போது திறன் மேம்பாட்டு மைய கட்டிடம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளபடி, கட்டிடம் அமைக்க ரூ.1.1 கோடி, பெரிய அளவிலான உபகரணங்களுக்கு ரூ.1.3 கோடி, சிறிய அளவிலான உபகரணங்கள் வாங்க ரூ.88 ஆயிரம், மற்றும் மற்ற உபகரணங்களுக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.2.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...