தூய்மை பள்ளிக்கான விருதிற்கு தும்மனட்டி அரசு பள்ளித் தேர்வு

நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.


நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். 



அதில், உதகையை அடுத்த தும்மனட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இப்பள்ளியின் தேவைகளை பெற்றோர், ஆசிரியர் கழகம் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்கள் நிறைவு செய்து வருகிறார்கள். 



இதில், பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநில மற்றும் அளவில் சிறந்து விளங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் ஆங்கிலப்புலமை, நடனம் யோகா உள்ளிட்டவற்றில் தனித் திறமையாக விளங்கிய மாணவ மாணவிருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 



மேலும், பள்ளியின் பாதுகாப்பு இப்பகுதியைச் சேர்ந்த கப்பச்சி வினோத் என்பவர் நன்கொடையாக 4 கண்காணிப்பு கேமிராவினை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை நடத்தும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...