கோவையில் யுவர்ஸ்டோரி நடத்தும் தொழில் தலைவர்கள் கூடும் கருத்தரங்கு : முன்பதிவு வரவேற்பு

கோவை : தமிழகத்தைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் மற்றும், தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு, கோவையில் நாளை மறுநாள் (31 ஜனவரி) தாஜ் விவாந்தாவில் நடைபெறவுள்ளது.

கோவை : தமிழகத்தைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் மற்றும், தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு, கோவையில் நாளை மறுநாள் (31 ஜனவரி) தாஜ் விவாந்தாவில் நடைபெறவுள்ளது. 



 

வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கும் இந்தியாவில் வணீக ரீதியாக அணுகும் இடத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு. அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தில், தொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களின் வெற்றிக்கதைகள் யுவர்ஸ்டோரி ஆங்கிலம் மற்றும் தமிழில் பக்கங்களில் கதைகள் வடிவிலான நேர்காணல்களாக வெளிவந்தன. 

இந்த நேர்காணல்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வெற்றி கண்டோர் முன்னிலை வகித்தனர். உண்மையில் இந்த நேர்காணல்கள் வெற்றிப் பெற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இந்நிலையில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான மாநாடுகளை முன்னின்று கொண்டு செல்வதிலும் யுவர்ஸ்டோரியே முன்னோடி. 

தமிழகத்தைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் மற்றும், தொழில் முனைவர்களை ஒன்று சேர்க்கும் வகையிலும், பல தலைமுறைகளாக தொழிலில் வெற்றி கண்ட தொழிலதிபர்களையும் கெளரவிக்கும் வண்ணம், ’2020 -க்குள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ரகசியம்’ என்ற தலைப்பில் கோவை மற்றும் மதுரையில் கருத்தரங்கு நடத்த உள்ளது. 

’2020 -க்குள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ரகசியம்’ அதாவது ‘Secret to Scaling up in 2020’ என்ற தலைப்பை உள்ளார்ந்து ஆராய்ந்து கண்டறியும் நோக்கில் ஒரே மேடையில், முக்கிய வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டார்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் வெற்றி தொழிலதிபர்களை ஒன்று சேர்த்து இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான வழிகள், தொழில் சார்ந்த சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை விருந்தினர்களாக வருகை தரவுள்ள தமிழகத்தின் தொழில் முனைவு வெற்றியாளர்களிடம் கேட்டறியலாம். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்னகளாக டாக்டர்.ஏ.வேலுமணி, தைரோகேர் நிறுவனர், சிஇஓ, சிகே. குமாரவேல், நேச்சுலர்ஸ் சலூன் நிறுவனர், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தலைவர், ஹேமலதா அண்ணாமலை, ஆம்பியர் எலக்ட்ரிக்ஸ் நிறுவனர், சிவராஜா ராமநாதன், நேடிவ் லீட், ரமேஷ், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, யுவர் ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரத்தா முன்னிலையில் மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். இறுதியாக நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, கோவை மற்றும் மதுரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து தொழிலில் வெற்றி அடைந்த தொழிலதிபர்களை, கோவை மற்றும் மதுரையின் அந்தந்த விழா மேடையில் கௌரவிக்க உள்ளது யுவர்ஸ்டோரி. 

கோவையில் ஜனவரி 31 -ம் தேதி அன்று தாஜ் விவாந்தாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் பதிவு செய்ய : https://zfrmz.com/nD2FAlYVTKVHaEQeNhzR

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...