ஆவணப்படத்தின் ஈர்ப்பால் உதகை மலைரயிலைத் தேடி வந்த பிரிட்டன் சுற்றுலா பயணிகள்

நீலகிரி : இங்கிலாந்து நாட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ஆவணப்படத்தில் நீலகிரி மலை ரயிலைக் கண்டு, அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.


நீலகிரி : இங்கிலாந்து நாட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ஆவணப்படத்தில் நீலகிரி மலை ரயிலைக் கண்டு, அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை மகிழ்ச்சியுடன் பயணித்தனர். 

இங்கிலாந்து நாட்டில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான பி.பி.சி.,யில் நீலகிரி மலை ரயில் குறித்த ஆவணப்படம் அண்மையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அங்குள்ள சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். 



இதையடுத்து, நீலகிரி மாவட்டத்திற்கு 31 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இரண்டு நாட்கள் உதகை, குன்னூர் ஆகிய இடங்களில் தங்கி பல்வேறு சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்த்தவர்கள் பின்பு தாங்கள் விரும்பிய நீலகிரி மலை ரயில் மூலம் இன்று மேட்டுப்பாளையத்திற்குப் பயணித்தனர். 

மேலும், அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிறப்பு மலை ரயிலில் பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் நீலகிரி மலை ரயில் சர்வதேச அளவில் மேன்மேலும் பிரபலமடைந்து வருவது தெளிவாக தெரிகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...