கோவை : தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 30 -ம் தேதி மதுக்கடைகளை மூடக் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 30 -ம் தேதி புதன்கிழமையன்று கீழ் கூறப்படும் அனைத்து மதுக்கூடங்களும் மூட உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய அனைத்து மதுக்கூடங்களும் மூட உத்தரவிடப்படுகிறது.
மேலும், விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.