வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தாய்க்கு சித்திரவதை : தாயை மீட்டுத் தரக் கோரி கோவையில் மகன் மனு

கோவை : ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியினர் அடித்து சித்ரவதை செய்து வேலை வாங்குவதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தாயை மீட்டுத் தர மகன் மனு அளித்துள்ளார்.

கோவை : ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியினர் அடித்து சித்ரவதை செய்து வேலை வாங்குவதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தாயை மீட்டுத் தர மகன் மனு அளித்துள்ளார். 

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி (43). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் டூரிஸ்ட் விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், அஸ்லாம்கான் சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். 

இந்நிலையில், ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்சியினர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம், சாமுண்டீஸ்வரி அலைப்பேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் தனது தாயாரை ஓமன் நாட்டில் இருந்து மீட்டுத் தருமாறு அவரது மகன் விக்னேஷ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், இது குறித்து உறவினர் சித்ரா கூறியதாவது :- என் அத்தையை வீட்டுக்கு வேலைக்காக அழைத்துச் சென்ற ஏஜென்சியினர் உணவு கொடுக்காமல், அடித்து சித்ரவதைப்படுத்தி வருகின்றனர். அதேபோல, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளனர். இதனால், அவரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, அவரை உடனடியாக ஓமனில் இருந்து மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...