கோவை : அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் அரசு தொழில் நுட்பத்தேர்வு தொடர்பாகக் கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளித்துள்ள மனுவிற்கு ஆர்.டி.ஐ பதில் அளித்துள்ளார்.

கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் தலைவரான இவர், தேர்வுத்துறை மூலம் நடத்தப்படும் அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் அரசு தொழில் நுட்பத்தேர்வு தொடர்பாக விபரங்களைக் கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவின் சாரம் :- அரசு தொழிலாளர் பயிற்சி மற்றும் தேர்வு கடைசியாக நடத்தப்பட்ட, ஆண்டு மற்றும் மாதம், நாள் என ஆதாரத்துடன் தகவல் வேண்டும் எனவும், அரசு தொழிலாளர் பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான கோப்புகளின் அடிப்படையில் ஆதாரத்துடன் தகவல் வேண்டும் எனவும், அரசு தொழிலாசிரியர் பயிற்சி நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கப்பட வாய்ப்புகள் பற்றிய நிலைப்பாடு பற்றிய தகவல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு தொழில்நுட்ப தேர்வு கடைசியாக நடத்தப்பட்ட ஆண்டு, மாதம், நாள் பற்றிய தகவல்கள், 2007 -க்கு பின் அரசு தொழில் நுட்பத்தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை ஓவியம், தையல், இசை, நெசவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வாரியாக தனித்தனியே எண்ணிக்கை குறித்த தகவல்கள், நடப்பு கல்வி ஆண்டில் அரசு தொழில்நுட்பத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மாதம், ஆண்டு என தகவல்கள் கேட்டு அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
இம்மனுவிற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் கீழ் பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் இணை இயக்குனர் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் தேர்வு கடைசியாக நடத்தப்பட்ட ஆண்டு, '2007 மற்றும் டிசம்பர்'. அரசு தொழிலாளர் பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான கோப்புகளின் அடிப்படையில் கோரியிருந்த தகவலுக்கு, 'பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தது, எனவே, அத்துறையை அணுகி விபரம் தெரிந்து கொள்ளவும்' என்றிருந்தது.
மேலும், அரசு தொழிலாசிரியர் பயிற்சி நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கப்பட வாய்ப்புகள் பற்றிய நிலைப்பாடு பற்றிய தகவலுக்கு, 'பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தது', எனப் பதிலளிக்கப்பட்டிருந்தது. 2007 -க்கு பின் அரசு தொழில் நுட்பத்தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை ஓவியம், தையல், இசை, நெசவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வாரியாக தனித்தனியே எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, இது மூன்றாம் நபரைப் பற்றியது என்பதால் மூன்றாம் நபரின் விவரம் வழங்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டில் அரசு தொழில்நுட்பத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மாதம், ஆண்டு எனக் கடைசியாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்துதல் தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய ஆணைப் பெறப்பட்டவுடன் அரசுத் தேர்வுத்துறையால் அறிக்கை வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.