மனவளர்ச்சியில்லா மாணவர்களை சிறந்த மாணவர்களாக மாற்றுவது கடும் சவாலானது : பெண்கள் தன்னார்வ சேவை சங்கம்

கோவை : மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக மாற்றுவது மிகவும் கடும் சவால் நிறைந்தது என பெண்கள் தன்னார்வ சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை : மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக மாற்றுவது மிகவும் கடும் சவால் நிறைந்தது என பெண்கள் தன்னார்வ சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

கோவையில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி இல்லாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்கள் 6 பேர் உள்ளனர். தொழில் நுட்ப நிபுணர், பேச்சு பயிற்சியாளர், சிகிச்சையாளர் ஆகியோர், இந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களும் வாங்கப்பட்டு, அவர்களுக்கான முழு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. 



அதோடு, இந்தக் குழந்தைகள் காகிதப் பைகள் தயாரித்தல், கிரீட்டிங் கார்டுகள், தபால் கவர்கள் மற்றும் மாலைகள் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டு 8 மாணவர்கள் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 

அவர்கள் அனைவரும் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஆச்சயர்படச் செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 18 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்களும், மனவளர்ச்சியை குறையாக எண்ணாமல், சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...