அண்ணா பல்கலை.,யின் தேர்வு முறையை மாற்றக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கிரெடிட் தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கிரெடிட் தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. 

இதனால், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைவதாகவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓராண்டு காலம் வீணாகிறது என மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து புதிய தேர்வு முறையை ரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும் கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். 

இதனையடுத்து, புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...