திருப்பூர் : திருப்பூர் 16-வது புத்தகத் திருவிழா வரும் 31-ஆம் தேதி பறையிசையுடன் தொடங்கப்படுவதாகவும், 10 நாட்கள் நடக்கும் இந்தக் புத்தக் கண்காட்சியில் 144 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுவதாக நிகழ்ச்சி ஒருங்கினைபபாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 16-வது புத்தகத்திருவிழா இந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, புத்தகத்திருவிழா வரவேற்புக்குழுவினர் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது :- இந்தாண்டு 31-ம் தேதி மாலை 100 பறையிசையுடன் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு 144 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகம் வாங்கும்போது, அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். புத்தகத்திருவிழாவின் 10 தினங்களும் காலையில் மாணவ, மாணவிகளுக்கான கலை அறிவியல் வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. கடந்தாண்டை விட கூடுதலாக பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தனர்.