கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை பிப்.,2-ம் தேதி மீண்டும் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஏற்கனவே வரும் பிப்ரவரி 2 தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால், இருவரின் ஜாமீனை ரத்து செய்யக் கூறி அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சயான் மற்றும் மனோஜ் இருவரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார்.
இந்த வழக்கு மிக முக்கியமானதால், கால அவகாசம் தரக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் பிப்ரவரி 2-ம் தேதி சயான் மற்றும் மனோஜை மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.