பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிப்பு : தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

கோவை : பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது.

கோவை : பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது. 

9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும்,' என போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 95 சதவீத ஆசிரியர்களே பணிக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எஞ்சியவர்கள் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், உத்தரவை ஏற்று பணிக்கு திரும்பாத 447 ஆசிரியர்களின் பணியிடங்களை, காலிப் பணியிடங்களாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...