திருப்பூரில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக மாவட்ட கல்வி அலுவலர் தகவல்

திருப்பூர் : திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பி விட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார். 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். இதனால், திருப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். 



இந்த நிலையில், இன்று மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தெரிவிக்கையில், "இன்றைக்கு 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல, தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் இதுவரை 2,000 பேர் பெற்றுள்ளனர்," எனக் கூறினார். 

இதனிடையே, திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, குளத்துப்புதூர் பள்ளியில் ஆசிரியர் வராத காரணத்தால், பெற்றோர்கள் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல, அவினாசி ஆட்டையம்பாளையம் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வராததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 

45 பேருக்கு 15 நாள் காவல்: 







9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் 45 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு 15 நாள் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...