கோவை : கோவை மாநகரில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர். இந்தக் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதில், பல்வேறு கோணங்களில் மேற்கண்ட கொலை வழக்குகள் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் கூறியதாவது :- விரைவில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள். அதேபோல, மாநகர காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறை மின்னணு கண் செயலியை இதுவரை 5,600 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சாலை விதிமீறல் தொடர்பாக 855 புகைப்படங்கள் புகார்களாக இதுவரை பெறப்பட்டுள்ளன.
இந்தப் புகார்களில் உள்ள விதிமீறலுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.3.55 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்யும் வகையில், தொடர்ந்து விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," இவ்வாறு அவர் கூறினார்.