Exclusive: மதுக்கரையில் பெற்றோர்களுடன் பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல் : பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததற்கு கண்டனம்

கோவை : பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆரம்பப் பள்ளி குழந்தைகள், தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆரம்பப் பள்ளி குழந்தைகள், தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம், காலியிடமாக அறிவிக்கப்பட்டு, வேறு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கையை விடுத்தது. 

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 95 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை - கேரள மாநிலம் சாலையில் உள்ள மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறியும், பள்ளிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்தும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மதுக்கரை சந்திப்பு அருகில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆரம்பப் பள்ளி குழந்தைகள் என சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார், குழந்தைகளின் பெற்றோர்களிடம் சமரசம் பேசி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

பள்ளிக் குழந்தைகளின் இந்த திடீர் சாலைமறியலால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...