95 சதவீத ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர் : பள்ளிக்கல்வித்துறை தகவல்

போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. 

எனினும், ஜாக்டோ-ஜியோ தரப்பில் பணிக்கு திரும்புவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேசமயம், அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் படிப்படியாக பணிக்குத் திரும்ப தொடங்கினர். 

எனவே, இறுதியாக இன்றைய தினம் காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களிடம் இடம் காலிப் பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது. 

இதையடுத்து, நேற்று குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர். மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை, 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...