கோடநாடு வீடியோ விவகாரத்தில் தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தன்மீது அவதூறான குற்றசாட்டுகளை பரப்பி வரும் சாமுவேல் மேத்யூவிடம் மானநஷ்ட இழப்பீடாக 1.10 கோடி ரூபாய் கேட்டும் முதலமைச்சர் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை, அதை தொடர்ந்த கொலைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதித்துள்ளது. மேலும், உரிய ஆதாரங்கள் இல்லாத ஆவணங்களை அவர்கள் வெளியிடவும் தடை விதித்த நீதிமன்றம் இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோடநாடு வீடியோ விவகாரத்தில் தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீதான விசாரணைக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கோடநாடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.