இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்க முடிவு

கோவை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

கோவை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும்.

அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும். இதுதொடர்பாக, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்க ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள், பணியில் சேர்வதை எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் அல்லது நேரிலோ, தங்களது மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் தகவல் அளித்துவிட்டு பணியில் சேரலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - உக்கடம் சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாகக் கூறி சுமார் 2,100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். 

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,152 ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதியும், பொதுத் தேர்வை கருத்தில் கொண்டும் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...